அதிர்ச்சியில் பா.ஜ.க ஜெயாவுக்கு கடிதம் எழுதிய ரஜினி

20.10.14

சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

18 வருடங்களாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி இந்திய ரூபாய் அபராதமும் விதித்து கடந்த மாதம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், 'நீங்கள் போயஸ் கார்டனுக்குத் திரும்பியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது நல்ல நேரத்துக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்களது உடல் ஆரோக்கியத்துக்கும் மன அமைதிக்கும் எப்போதும் வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்' என ரஜினி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரஜினிகாந்தை முதல்வர் ஆக்கும் முயற்சியில்  பாரதிய ஜனதாக் கட்சி ஈடுபட்டு வரும் நிலையில் ரஜினி இவ்வாறு கடிதம் எழுதியுள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :