குளியலறையில் ஐஸ்கிறீம் நிலையம்

30.10.14

யாழ் நகர்ப்பகுதியில் மிகவும் சுகாதாரச் சீர்கேடான முறையில் இயங்கி வந்த ஜுஸ் உற்பத்தி நிலையம் யாழ் நீதிமன்றினால் சீல் வைத்து மூடப்பட்டது. அண்மையில் இவ்வுற்பத்தி நிலையத்தினை சுற்றிவளைத்த சுகாதாரத் திணைக்களத்தின் விசேட குழுவினர் இங்கு மிகவும் சுகாதாரச் சீர்கேடான முறையில் ஜுஸ் உற்பத்தி நடைபெறுவதைக் கண்டுபிடித்தனர். சிறிய வீடு ஒன்றில் தொலைத்தொடர்பு நிலையம், புகைப்பட நிலையம் என்பவற்றுடன் குளியலறையில் ஜுஸ் உற்பத்தியும் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. அசுத்தமான நீரில் மருத்துவச் சான்றிதழ் எதுவும் பெறப்படாமல் உற்பத்தி நடைபெற்று வந்துள்ளது. இந்நடவடிக்கையின் போது பெருமளவிலான ஜுஸ் பக்கற்றுக்கள் நீதிமன்றினால் மனிதப் பாவனைக்கு உதவாதவை என முடிவுசெய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இதன் போது கைப்பற்ற ஜுஸ் உற்பத்திக்குப் பாவிக்கப்படும் வாசனைத் திரவியம் கிருமிநாசினிப் போத்தலில் சேமிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான உற்பத்திப் பொருட்களினால் பெரும்பாலும் சிறுவர்களே பாதிப்படைவதாகவும் இவ்வாறான தொடர்நடவடிக்கைகளை விரைவாக நடாத்தும்படியும் வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :