இந்துக்களுக்கு பாகிஸ்தான் அதிபர் தீபாவளி வாழ்த்து

23.10.14

பாகிஸ்தான் நாட்டு அதிபர் மம்னூன் உசைன் வெளியிட்டு உள்ள தீபாவளி வாழ்த்து குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தீபாவளி திருநாளில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த நன்னாளில் உங்களது வாழ்வில் அமைதி, வளம், மகிழ்ச்சி பொங்கட்டும்.

நம் நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாராத்தை உயர்த்தவும், நலனை காக்கவும் பாகிஸ்தான் அரசு அனைத்து முயற்சிகளையும் உறுதியாக எடுக்கும்.

தேசிய மேம்பாட்டு பணிகளில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பை பாகிஸ்தான் அரசு ஊக்குவிக்கும். இந்த முயற்சிகளில், பாகிஸ்தான் அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை நாம் பின்பற்றுகிறோம். மேலும், முகமது-அலி-ஜின்னா சிறுபான்மையின பாதுகாவலராக திகழ்ந்தார்.
 நாம் ஆட்சி புரிவதற்கு அவரது வார்த்தைகள் மிகவும் உதவிபுரிகிறது.

 இந்து மதத்தினரும், சிறுபான்மையின பிரிவை சேர்ந்த மற்ற வகுப்பினரும் பாகிஸ்தானின் மகிழ்ச்சியையும், மத நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு உங்களது மதிப்புமிக்க பங்களிப்பை தொடர்ந்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

0 கருத்துக்கள் :