இளைஞனின் உயிரைப் பறித்த காதல்

28.10.14

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹென்போல்ட் பிரிவுக்குட்பட்ட வாழைமலை தோட்டத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வாழைமலை தோட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஜெயராம் மோகன்ராஜ் என்ற இளைஞரே இவ்வாறு தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரண விசாரணைகளின் பின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்படுவதோடு பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டராங்கள் தெரிவிக்கின்றன. இளைஞரின் தந்தை கொழும்பில் வேலை செய்வதோடு தாய் வெளிநாட்டில் வேலை செய்வதாகவும் நாளை அவர் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் பிரச்சினையே தற்கொலைக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இளைஞன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் மேலதிக தகவல்கள் பொலிஸ் விசாரணையில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 கருத்துக்கள் :