தங்க காற்சட்டை அணிந்திருந்த நபர் கட்டுநாயக்கவில் கைது

26.10.14


தங்கம் வைத்து தைக்கப்பட்ட காற்சட்டையை அணிந்து சென்ற இலங்கையரொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவை நோக்கி பயணிக்கவிருந்த கொழும்பு, குணசிங்கபுரத்தை சேர்ந்த 34 வயதான புடவைக்கடை வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
குறித்த நபர் மேலும் சில தங்கத்துண்டுகளை மலவாயில் மறைத்து வைத்துக் கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.
குறித்த நபரிடமிருந்த தங்கத் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றின் நிறை 289கிராம் என்றும் அதன் பெறுமதி 14 இலட்சத்து 5 ஆயிரத்து 200 ரூபாய் என்றும் அவர் தெரிவித்தார்.
சந்தேகநபர் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்173 என்ற விமானத்திலேயே பெங்களூரை நோக்கி செல்லவிருந்ததாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துக்கள் :