கார் விபத்தில் காயமின்றி தப்பினார் வைகோ!

25.10.14

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ  மதியம் திரும்பி வந்து கொண்டிருந்தார். மதுரையை அடுத்த மேலூர் அருகே நான்குவழிச் சாலையில் கத்தபட்டி சுங்கசாவடி வழியாக வந்தார்.

 அவரது காரை பின்தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட கார்களில் ம.தி.மு.க. நிர்வாகிகளும் வந்தனர்.
வெள்ளரிபட்டியை அடுத்து வந்த போது ரோட்டின் குறுக்கே திடீரென்று ஒரு மாடு குறுக்கிட்டது. இதை பார்த்ததும் மாடு மீது மோதாமல் இருக்க வைகோ வந்த காரை டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினார்.

அப்போது பின்னால் வந்த அவரது ஆதரவாளர்களின் கார்கள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வைகோவின் கார் மீது மோதின. இதனால் வைகோ காரின் பின்பகுதி லேசாக சேதமடைந்தது.

 அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார். கார்களுக்கு மட்டுமே சிறு சேதம் ஏற்பட்டதால், வைகோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மதுரைக்கு பயணத்தை தொடர்ந்தனர்.

0 கருத்துக்கள் :