மது போதையில் கள்ளச்சாரம் கைப்பற்ற வந்ததாகக் கூறி பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த இரு பொலிஸார்

15.10.14

அளவுக்கதிகமாக மது  அருந்திவிட்டு, கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களைக் கைது செய்யும் போர்வையில் ஆரச்சிகட்டுவ   பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் பலாத்காரமாக நுழைந்து அங்கிருந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த சிலாபம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோஸ்தர்கள்  இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த இருவரும் ஞாயிற்றுக்கிழமை  இரவு அளவுக்கதிகமாக மதுவருந்தி விட்டு வீடொன்றுக்குள் பலாத்கரமாக நுழைந்து அங்கிருந்த கதிரைகளில் அமர்ந்து வீட்டிலுள்ள பெண்ணிடம் இங்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்கின்றீர்களா  எனக்கூறி பெண்ணைத் தாக்கியுள்ளனர்.

 பெண் கூச்சலிடவே அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் ஒன்று கூடி பொலிஸ் உத்தியோஸ்தர்களை தாக்கி சிலாபம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். பொலிஸார் விரைந்து வந்து இருவரையும் பொறுப்பேற்றுள்ளனர்.

பொலிஸாருக்கு  அப கீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் நடந்து கொண்டுள்ளதால் இவர்களை தற்காலிகமாக சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களில் ஒருவர் ஒருவரைதாக்கியமை தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

0 கருத்துக்கள் :