பேஸ்புக் அச்சம்

14.10.14

பேஸ்புக் ஊடாக பாடசாலை மாணவர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் முயற்சி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் உடனடியாக அது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பண்டுவஸ்நுர தேசிய பாடசாலையில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பாடசாலை மாணவர்களை பேஸ்புக் ஊடாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இது மிகவும் பாரதூரமான பிரச்சினை என்பதால், இவ்வாறான விடயங்களில் பிள்ளைகள் ஈடுபடுவதை பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. நானும் பாடசாலை மாணவர்களை இப்படியான அரசியல் விடயங்களில் பயன்படுத்த இடமளிக்க மாட்டேன்.

ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை, தாக்கப்பட்டமை, ஊடக நிறுவனங்கள் மீது தீவைக்கப்பட்டமை என்பன ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் ஊடகங்கள் அடக்கப்பட்டன.

அத்துடன் உத்தியோகபூர்மாற்ற வகையில் ஊடகங்கள் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன.
இவ்வாறான சூழ்நிலையில், பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய எதிர்ப்பு கட்டியெழுப்பட்டுள்ளது.

இது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்பதால், எப்படியாவது பேஸ்புக்கை தடை செய்ய வேண்டும் என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

0 கருத்துக்கள் :