60 இலட்சம் ரூபா பணத்துடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!

23.10.14

பெருந்தொகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணத்தினை கொண்டுச் செல்ல முயன்ற நபர் ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மிஹின் லங்கா விமானத்தில் டுபாய், சார்ஜாவுக்கு செல்லவிருந்த மருதானை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இன்று காலை 7.30 மணியளவில் விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 60 இலட்சத்து 66 ஆயியரத்து ரூபா பெறுமதியான 15800 அமெரிக்க டொலர்கள், 3500 யூரோக்கள் மற்றும் 33 இலட்சத்து 98 ஆயிரம் ரூபா இலங்கை பணம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த நபருக்கு இரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டள்ளதோடு மேலதிக விசாரணைகளை சுங்கப்பிரிவினர் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :