மடிக்கணனியில் 26 லட்சம் பெறுமதியான தங்கம்

25.10.14

சட்டவிரோதமாக தங்கத்தை நாட்டுக்குள் எடுத்து வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து வந்த விமானப் பயணிகளை சோதனையிட்டபோது இலங்கையர் ஒருவர் நேற்றையதினம் சிங்கப்பூர் சென்று இன்று நாடு திரும்பியிருப்பது தெரியவந்தது.
இதன் காரணமாக அவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அவரது உடைமைகளை தீவிரமாக சோதனையிட்டுள்ளனர்.
அதன்போது குறித்த நபர் கையில் வைத்திருந்த மடிக்கணனியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐந்து தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
500 கிராம் எடையான இந்த தங்கத்தின் பெறுமதி 26 லட்சம் ரூபா என சுங்க பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், அவர் கொண்டு வந்த தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
குறித்த 26 வயதான நபர் கொழும்பு தெமட்டகொடையில் பாரியளவிலான மொபைல் போன் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் என்றும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :