ஊர்காவற்துறையில் பாய்மரப் படகோட்டப் போட்டி

2.9.14

ஊர்காவற்துறை தம்பாட்டியில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டிகளின் ஒரு அங்கமாக, பாய் விரித்து படகோட்டும் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டிகளை காந்திஜி விளையாட்டு கழகம் கடற்தொழிலாளர் சங்கங்கள் காந்திஜி சனசமூக நிலையம் ஆகியன இணைந்து நடத்தியிருந்தன. இதில் ஏ அணியும் பி அணியுமாக இரு அணிகள் பங்குபற்றின. போட்டிக்குரிய படகுகள் யாவும் தம்பாட்டியிலிருந்து புறப்பட்டு அராலி துறைக்கு சென்று அங்கிருந்து போட்டிகள் ஆரம்பமாகின. முறையே ஏ அணிக்கான போட்டியை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கே.என்.விந்தன் கனகரத்தினம் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார். பி அணிக்கான போட்டியை கூட்டமைப்பின் முக்கியஸ்தரான ஹென்றி மகேந்திரன் ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வில் தம்பாட்டி கிராம முன்னேற்ற சங்கத் தலைவர் சிவனேசப்பிள்ளை, செயலாளர் அன்னராசா, விளையாட்டு குழு தலைவர் கனகையா உட்பட பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.0 கருத்துக்கள் :