பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை

8.9.14

பாகிஸ்தானில் சிறுபான்மையாக உள்ள ஷியா பிரிவினர் மீது சன்னி பிரிவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இங்கு மொத்த மக்கள் தொகையில் ஷியா பிரிவினர் 20 சதவீதத்தினர் மட்டுமே உள்ளனர். சன்னி பிரிவினர் தான் பெரும்பான்மையாக உள்ளனர். இதனால் ஷியா பிரிவினர் மீதான தாக்குதல் தொடர்கிறது.

இந்த நிலையில் சார்கோதா என்ற நகரில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதிக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரி பாசல் ஜாகூர் என்பவர் நேற்று சென்றார். அப்போது முகமூடி அணிந்துகொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ராணுவ அதிகாரி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இந்த தாக்குதலில் அதிகாரியின் சகோதரர் பாசல் சுபானி மற்றும் முகம்மது அயூப் ஆகியோர் உயிரிழந்தனர்.

ராணுவ குடியிருப்பு பகுதிக்குள் உள்ள மசூதிக்குள் நடந்த இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. கொல்லப்பட்ட ராணுவ அதிகாரிக்கு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் ஒன்று கொலை மிரட்டல் விடுத்து இருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :