வடக்கு கிழக்கு இணைய சட்டத்தில் இடமில்லை – பிள்ளையான்

21.9.14

வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது குறித்து பேசுவதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. அவ்வாறு மாகாணங்கள் ஒன்றாக இணைந்து செயற்படக் கூடிய சாத்தியம் சட்ட ரீதியாகவும் கிடையாது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையுடன் இணைவதனை கிழக்கு மாகாண மக்கள் விரும்பவில்லை.  வடக்கு கிழக்கை மீள இணைக்கும் பிரச்சினையானது ஓர் அரசியல் ரீதியான பிரச்சினை.

கிழக்கு வாழ் மக்கள் கிழக்கு மாகாணசபையின் கீழ் சேவைகளை பெற்றுக்கொள்வதாகவும், வடக்குடன் இணைப்பதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக் கூடுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்து வரும் கோரிக்கையானது அரசியல் ரீதியானது எனவும் அடுத்த தேர்தல்களை இலக்கு வைத்து இவ்வாறு கோரி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கு மீள இணைப்பானது தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல எனவும் முஸ்லிம்கள் அதற்கு இணங்க மாட்டார்கள்.

இரண்டு முதலமைச்சர்கள் இருக்கின்ற இடத்தில் ஒரே முதலமைச்சர் இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேவேளை கிழக்கு வாழ் சிங்கள மக்களும் வடக்குன் இணைவதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :