இலங்கை மீதான மனித உரிமை மீறல் விசாரணைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் :புதிய ஐ.நா. மனித உரிமை ஆணையர்

7.9.14

இலங்கை மீதான மனிதஇலங்கை மீதான மனித உரிமை மீறல் விசாரணைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று  புதிதாக நியமிக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமை அமைப்புக்கான ஆணையர் சையது அல் உசைன் தெரிவித்துள்ளார்.  ஜோர்டான் நாட்டை சேர்ந்த உசைன் தாம் பொறுப்பெற்றதும் வெளியிட்ட முதல் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.


இலங்கை இறுதிகட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா&வின் விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். மேலும் நீதியை நிலைநாட்டும் விதத்திலும் தமிழர்கள் சிங்களற்கு இடையே இணக்கத்தை ஏற்படுத் தும் முயற்சிகளை இலங்கை மேற்கொள்வது அவசியம் என்றும் உசைன் தமது அறிக்கையில் சுற்றிகாட்டியிருந்தார்.


 அந்நாட்டில் சிறுபான்மை முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்துவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவ ங்கள் வேதனை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையராக இருந்த நவநீதம்பிள்ளை இலங்கையில் நடத்திய விசாரணையில் அடிப்படையில் 3 பேர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவை  இலங்கைக்குள் அனுமதிக்க அந்நாடு மறுத்து வரும் வேலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆணையரும் இலங்கை மீதான விசாரணைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. உரிமை மீறல் விசாரணைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் :புதிய ஐ.நா. மனித உரிமை ஆணையர்

0 கருத்துக்கள் :