மட்டக்களப்பு சிறைச்சாலையில் மோதல்: கைதிகள் மூவர் படுகாயம்

29.9.14

மட்டக்களப்பு மத்திய சிறைச்சாலையில் இன்று மாலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதிகள் மூவர் படுகாயமடைந்து மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கே.புஸ்பராஜா (23வயது), ஏ.எம்.ஜமீல் (22வயது), எஸ்.எல்ஏ.ரினோல்ஸ் (22வயது) ஆகிய மூவரே படுகாயமடைந்துள்ளனர்.
சிறைக்கைதிகள் இரு குழுக்களிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்துள்ளதாக தெரியவருகின்றது.
எனினும் மோதல் நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மோதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கொள்ளை குற்றச்சாட்டின் கீழ் தண்டனை வழங்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துக்கள் :