மாணவி மீது பாலியல் வல்லுறவு இளைஞன் கைது

8.9.14

மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 20 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;

பாலமுனை 1 ஆம் பிரிவை சேர்ந்த மாணவி கடந்த 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வீட்டில் இருந்து மேலதிக வகுப்பிற்காக சென்றவர் அன்றிரவு வீடு திரும்பாததால் மாணவியின் தாய் மறுநாள் சனிக்கிழமை அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

வீட்டில் இருந்து மேலதிக வகுப்பிற்கு சென்ற சிறுமியை அதே பிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளைஞன் அழைத்து சென்று அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள இளைஞனின் உறவினர் ஒருவரின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு தங்க வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

பெற்றோர் மாணவியை தேடிக்கொண்டிருக்கும் போது அவரிடமிருந்து கைத்தொலைபேசி அழைப்பு ஒன்று நான் அட்டாளைச்சேனை வீடொன்றில் இருக்கிறேன் என வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் தாய் பொலிஸாரின் உதவியுடன் இருவரையும் கைது செய்தனர்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :