குடிபோதையில் பெண் போலீஸ் மடியில் உட்கார்ந்த மீனவர் பயணிகள் தர்மஅடி

11.9.14

சென்னை எண்ணூர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்க்கும் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை எண்ணூர் அத்திப்பட்டு புதுப்பாலம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து பாரிமுனை செல்லும் மாநகர பஸ்சில் போலீஸ் நிலையம் செல்வதற்காக ஏறி இருக்கையில் அமர்ந்தார்.


காட்டுக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நின்றபோது போதை ஆசாமி ஒருவர் தள்ளாடியபடி பஸ்சில் ஏறினார். ஆண்கள் அமரும் பகுதியில் இருக்கைகள் காலியாக இருந்தும் அவர் நின்றுகொண்டு பயணம் செய்தார்.


பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் பெண் போலீஸ்காரர் அமர்ந்து இருந்த இருக்கையின் அருகே உளறியபடி சென்ற அவர் திடீரென பெண் போலீசின் மடியில் அமர்ந்தார். அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் கூச்சலிட்டார். உடனே மற்ற பயணிகள் போதை ஆசாமியை பஸ்சில் இருந்து கீழே இறக்கி தர்மஅடி கொடுத்தனர்.


அவரை எண்ணூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். குடிபோதையில் இருந்த அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் போதை இறங்கிய பின்னரே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.


விசாரணையில் குடிபோதையில் தகராறு செய்தவர் எண்ணூர் நெட்டுக்குப்பத்தைச் சேர்ந்த முரளி (வயது 47) என்பதும், அவர் மீனவர் என்பதும் தெரியவந்தது.

0 கருத்துக்கள் :