சுவிஸில் நண்பியை கொலை செய்த இலங்கையருக்கு நியூஸிலாந்தில் விளக்கமறியல் நீடிப்பு

2.9.14

சுவிட்ஸர்லாந்தில் 14 வருடங்களுக்கு முன்னர் தனது முன்னாள் நண்பியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நியூஸிலாந்தின் ஒக்லேன்ட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த இலங்கையர் இன்று ஒக்லேன்ட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார்.
42 வயதான இந்த இலங்கையர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார். சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே அவர் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் நண்பியான 23 வயதான கவிதா கந்தையா என்பவரை 2000 ஆம் ஆண்டு பாசெல் நகரில் வைத்து இந்த இலங்கையர் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையர் சார்பில் இன்று பிணை மனு எவையும் தாக்கல் செய்யப்படவில்லை.
குறித்த இலங்கையர் 2001 இல் நியூஸிலாந்துக்கு சென்று அங்கு போலியான ஆவணங்களை சமர்ப்பித்து 2004 ஆம் ஆண்டு நியூஸிலாந்தின் பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டார்.

0 கருத்துக்கள் :