சீனாவை பகைத்துக்கொள்ளும் வகையில் இலங்கை - ஜப்பான் உறவில் நெருக்கம்

11.9.14


இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் என்றும் இல்லாதவாறு உறவுகள் பலப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ஜப்பானுக்கு எதிரான சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில், ஜப்பானுக்கு இலங்கை தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

கிழக்கு சீன கடலில் வான் மற்றும் கடல்பகுதி பயணங்களுக்கு சீனா ஏனைய நாடுகளுக்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது.

இதன்காரணமாக ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் நிலவி வருகிறது.
இந்தநிலையில் அண்மையில் இலங்கைக்கு ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே விஜயம் மேற்கொண்ட போது, இலங்கையும் ஜப்பானும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டன.
அந்த அறிக்கையில், கிழக்கு சீனக் கடல் பகுதியில் சுதந்திரமான நடமாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று இரண்டு நாடுகளும் இணக்கம் வெளியிட்டுள்ளன.

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்துக்கொள்வதற்காகவும் அதன் வர்த்கத்தை பெருபிக்கும் வகையிலேயே இலங்கை இந்த விடயத்தில் ஜப்பானுடன் இணைந்த நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :