ஹரினின் வாகனத்தின் மீது தாக்குதல்

22.9.14

ஐக்கிய தேசியக்கட்சியின் ஊவா மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோவின் வாகனத்தின் மீது ஹாலி-எல பிரதேசத்தில் வைத்து கல்வீச்சுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹாலி-எல பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகில் வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஊடகவியாளர் சிலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துக்கள் :