ஜெ., தண்டனை மூலம் இந்திய - இலங்கை உறவில் பொற்காலம் மலர்ந்துள்ளது

30.9.14

ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியப் பிரமுகரும், மேல்மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில நேற்று கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ஜெயலலிதாவுக்கு கிடைத்துள்ள தண்டனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


அவர்,  ‘’இலங்கை தொடர்பான விவகாரங்களில் ஜெயலலிதா அநாவசியமாகத் தலையிட்டுக் கொண்டே இருந்தார். இலங்கை தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்.


இந்நிலையில்,  இலங்கை தொடர்பாக அவர் அளித்த ஆலோசனைகள் தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளன. இங்குள்ளவர்களை சிறையில் தள்ள அவர் குரல் கொடுத்தார். ஆனால் தற்போது அவரே சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்.


இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவுக்கு இந்திய குடியரசுத் தலைவரின் பொதுமன்னிப்பு கிடைக்கக் கூடாது என்பதே எங்கள் கருத்து.


ஜெயலலிதாவுக்கு கிடைத்துள்ள தண்டனை மூலம் இந்திய- இலங்கை உறவில் இருந்த தடை அகன்று விட்டது. இனி  இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பொற்காலம் மலர்ந்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :