பயங்கரவாதிகள் மீது ஆளில்லா விமானத்தாக்குதல் : ஐ.நாவில் இலங்கை கண்டனம்

24.9.14

பயங்கரவாதிகள் மீதான ஆளில்லா உளவு விமானத் தாக்குதல்கள் சர்வதேச மனித உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாக இலங்கை குற்றம் சாட்டியுள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் அமர்வில் கலந்து கொண்ட இலங்கையின் பிரதிநிதி இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆளில்லா உளவு விமானத் தாக்குதல்கள் மனித உரிமைகளை மீறுவதாக மட்டுமன்றி, மனிதாபினமானத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளன.

இலங்கை பயங்கரவாத்தை எதிர்கொண்டு வெற்றிகண்ட நாடு. பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் மனித உரிமைகள் மீறப்படக் கூடாது.

உலகின் பல்வேறு நாடுகள் ஆளில்லா உளவு விமானங்களை கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றன. ஒரு சில நாடுகள் தான் இவற்றில் ஆயுதங்களைப் பொருத்தி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

இதற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.

0 கருத்துக்கள் :