ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திரையுலகம் திரண்டது!

29.9.14

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தன் முதல்வர் பதவியை இழந்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் நேற்று வரை போராட்டம் நீடித்தது.
தற்போது ஜெயலலிதாவை, விடுதலை செய்யக்கோரி தமிழ் திரையுலகம் சார்பில் நாளை(செப்., 30ம் தேதி) ஒருநாள் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது.
அநேகமாக தயாரிப்பாளர்கள் சங்க வளாகத்தில் இது நடக்கலாம் என தெரிகிறது. இதில் நடிகர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

0 கருத்துக்கள் :