பல்கலை. மாணவர்கள் நால்வர் கடத்தல்

8.9.14

மொனராகலை மாவட்டத்தில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மொனராகலை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள  தேர்தல் வன்முறையின் உச்ச கட்டமாக இன்று காலை 6.00 மணியளவில் மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர் வீட்டில் தங்கியிருந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் முகம் கழுவுவதற்காக கிணற்றுக்கு சென்ற போது இலக்க தகடு இல்லாத டிபென்டர் வாகனத்தில் வந்த இனந் தெரியாதோர்  மாணவர்களை கடுமையாக தாக்கியதோடு இம் மாணவர்களில் ஒருவரை கடத்தி சென்றுள்ளார்கள்.

மூவர் மிக கடுமையான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட மாணவனின் நிலை, வாகனம் மற்றும் கடத்தப்பட்டவர்களையோ கண்டுபிடிக்க முடியாமல் உள்ளதாகவும் இத் தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கும் தற்காலிக பொலிஸ் சாவடிக்கும் சுமார் 50 மீட்டர் துாரமே, ஆனால் பொலிஸாருக்கு இக்கும்பலை பிடிக்கமுடியாதிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கபே அமைப்பு தெரிவிக்கின்றது.

மக்கள் விடுதலை முன்னணி மொனராகலை மாவட்ட வேட்பாளர் பல்லியகுருகே விஜேசிறியின் வீட்டில் குறித்த மாணவர்கள் தங்கியிருந்துள்ளனர். இதேவேளை மாகாண சபை வேட்பாளரின் வீட்டிற்கும் கடந்த வாரம் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :