ஈழத் தமிழர்களின் பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல: பழ. நெடுமாறன்

2.9.14

ஈழத் தமிழர்களின் பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல என, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக பாஜக தலைவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற அறக்கட்டளை நிர்வாகக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், முற்றத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை நவம்பரில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது” என்றார்.

“அண்மையில் இந்தியா வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒருங்கிணைந்த இலங்கைக்குள்தான் தீர்வு கேட்கிறோம் என்கிறார். ஆனால், நீங்களோ தனி ஈழம் தான் தீர்வு என்கிறீர்களே” என்று கேட்டபோது,
ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை ஈழத் தமிழர், புலம்பெயர்ந்த தமிழர் ஆகியோரிடம் பொது வாக்கெடுப்பு நடத்தித்தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல. அவர்களிடையே வேறுபட்ட கருத்துகள் உள்ளன.
வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடந்து 2 ஆண்டுகள் ஆன பின்னரும் இதுவரை எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை என்று அவர்கள் தான் சொல்கின்றனர்.

இப் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகக் கூறுகின்றனர். இந்தியாவின் நிலைப்பாடே இரட்டை வேடமாக உள்ளது.
ஈழத் தமிழ் மக்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும் என பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :