பிச்சைகாரர்களிடமிருந்து பச்சிளம் குழந்தைகள் மீட்பு

8.9.14கர்நாடக மாநில மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கிழக்கு பெங்களூரில் உள்ள பிரேசர் டவுன் மற்றும் கம்மனஹல்லி பகுதியில் நடத்திய சோதனையில் ஐந்து பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டன.


போலீசாரின் விசாரணையில் அக்குழந்தைகளில் 4 பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், ஒரு குழந்தை தமிழ்நாட்டை சேர்ந்தது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இக்குழந்தைகளை வைத்து பிச்சையெடுத்து வந்த 5 சிறு வயதினரையும் போலீசார் மீட்டனர். அவர்களில் இரு சிறுவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், மூன்று சிறுமிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் கண்டுபிடித்தனர்.


பிச்சையெடுக்கும் சிறுவர்களுக்கு தொந்தரவு தராதவாறு குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பெண்கள் உள்பட ஒரு ஆணும் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் தாங்கள் அக்குழந்தைகளின் பெற்றோர் என்று தெரிவித்தனர். எனினும் போலீசார் அவர்கள் கூறுவது உண்மை தானா? என்று ஆராய்ந்து வருகின்றனர்.

 

0 கருத்துக்கள் :