இலங்கையில் இந்தியர்கள் 7 பேர் கைது

21.9.14

இலங்கையில், 'விசா' காலம் முடிந்த பிறகும் தங்கி இருந்ததாக இந்தியர்கள் 7 பேரை அந்த நாட்டு போலீசார் கைது செய்தனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை பகுதியில், 'விசா' காலம் முடிந்த பிறகும் இவர்கள் சட்ட விரோதமாக தங்கி இருந்து துணி வியாபாரம் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதானவர்கள் 23 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், அவர்கள் கல்முனை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தாக அங்குள்ள'டெய்லி மிரர்' பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது.

0 கருத்துக்கள் :