கழுத்து வெட்டப்பட்ட நிலையில் 68 வயது முதியவர்

29.9.14

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மகிழூர் நாகபுரம் பேக்கரி வீதியில் உள்ள வீட்டிலிருந்து செல்லத்தம்பி தங்கவேல் (68 வயது) என்பவரை இவ்வாறு சடலமாக மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் கடந்த 35 வருடமாக குடும்பத்தினை பிரிந்து தனிமையில் இருந்து வந்ததாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :