மூக்கின் வழியாக சொப்ஸ்டிக் குச்சி மூளைக்கு புகுந்தது 2 வயது சிறுவன் அதிஷ்டவசமாக உயிர்தப்பினான்

25.9.14

ஜப்பான், சீனா முத­லான நாடு­களில் உணவு உட்­கொள்­வ­தற்குப் பயன்­ப­டுத்­தப்­படும் சொப்ஸ்டிக் எனப்­படும் குச்­சி­யொன்று சிறு­வ­னொ­ரு­வனின் மூக்கின் வழி­யாக சென்று மூளைக்குள் நுழைந்த போதிலும் அச்­சி­றுவன் அதிஷ்ட­வ­ச­மாக உயிர்­தப்­பி­யுள்ளான்.

சீனாவின் ஹுபே மாகா­ணத்தைச் சேர்ந்த 2 வய­தான ஹுவாங் எனும் இச்­சி­று­வனின் மூளைக்­குள்ளே மேற்­படி சொப்ஸ்டிக் குச்சி புகுந்­த­துடன் அவனின் மூளைக்குள் சுமார் 3 அங்­குல ஆழத்­துக்கு ஊடு­ரு­வி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
 வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்­துச்­செல்­லப்­பட்ட அச்­சி­று­வ­னுக்கு அவ­சர சிகிச்­சை­செய்­யப்­பட்டு மேற்­படி குச்சி அகற்­றப்­பட்­டது. தற்­போது அவன் குண­ம­டைந்து வரு­கிறான்.அந்த சொப்ஸ்டிக் குச்சி எவ்­வாறு ஹுவாங்கின் மூக்­கிற்குள் எவ்­வாறு புகுந்தது என்பது தனக்குத் தெரியவில்லை என அச்சிறுவனின் தந்தை கூறியுள்ளார்

0 கருத்துக்கள் :