கமரூனின் தலையை வெட்டுவேன்: 18 வயது பெண் ஜிகாதியின் வெறி!

9.9.14

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் தலையை வெட்டுவேன் என்று அந்நாட்டை சேர்ந்த 18 வயது ஐ.எஸ்.ஐ.எஸ்இயக்க பெண் ஜிகாதி வெறியுடன் கூறியுள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடு அமைப்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சிரியாவில் உள்நாட்டு போர் செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லாப் ஆகியோரை அவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். பின்னர் இருவரது தலையையும் துண்டித்து கொலை செய்து விட்டனர்.
இதற்கிடையே அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவை தலை துண்டித்து கொலை செய்தது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜிகாதி ஜான் என்று புதிய தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் தலையை ஒரே வெட்டாக வெட்ட வேண்டும் என்று பெண் ஜிகாதி தனது வெறியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான தகவல்கள் பெண் ஜிகாதியின் டுவிட்டரில் வெளியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளளது.
18 வயதேயான அந்த பெண் ஜிகாதி, இஸ்லாமியர்களுக்கு எதிரான டேவிட் கமரூன் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு குடியுரிமை பறிக்கப்பட்டது குறித்து நான் கவலைகொள்ளவில்லை. ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் பொறுத்துக் கொள்ளமாட்டேன். டேவிட் கமரூன் தலையை நான் வெட்டுவேன். என்று தெரிவித்துள்ளார்.


இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அந்த பெண் ஜிகாதி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள சிரியாவின் ராக்கா நகரில் உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், அந்த பெண் ஜிகாதியின் டுவிட்டர் கணக்கு கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

0 கருத்துக்கள் :