ஐ.எஸ். போராளிகளுடன் இணைந்து செயற்பட்ட அமெரிக்க போராளி உயிரிழப்பு

28.8.14

சிரியாவில் ஐ.எஸ். போராளிகளுடன் இணைந்து செயற்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த டக்ளஸ் மக்கெயின் தாக்குதல் ஒன்றின் போது உயிரிழந்துள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

மக்கெயின் கடந்த வார இறுதியில் சிரிய விடுதலை இராணுவத்தால் சடலமாக மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்கர்கள் சிலர் சிரியாவுக்கு பயணத்தை மேற்கொண்டு அங்குள்ள போராளி குழுக்களுடன் இணைந்து போராடி வருவதாக நம்பப்படுகிறது.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கிறிஸ்தவரான டக்ளஸ் மக்கெயின் இஸ்லாமிய மதத்தை தழுவி வெளிநாடு சென்றிருந்ததாகவும் அவர் துருக்கியில் இருப்பதாகவே அவரது குடும்பத்தினர் நம்பியதாகவும், அவர் சிரியா சென்றது தமக்கு தெரியாது எனவும் அமெரிக்காவிலுள்ள அவரது மைத்துனர் ஜொசெலின் ஸ்மித் கூறினார்.

0 கருத்துக்கள் :