கடமையிலும் கன்னியத்தை மறந்த காலன் மருத்துவ தாதியை கொண்டு சென்றான்

13.8.14

மட்டுவில் தெற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடமை யாற்றும் மருத்துவ மாது ஒருவர் கடமை நேரத்தில் மயங்கி விழுந்த மரணமானார். இவ்துயரச்சம்பவம்  இன்று 2014.08.13  புதன் கிழமை மதியம் ஒரு மணிக்கு  மட்டுவில் தெற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தருகில் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஸ்ரான்லின் நிஷாந்தினி (வயது - 27) என்ற இளம் மருத்துவ தாதியே  உயிரிழந்தவராவார்.

 

குறித்த மருத்துவ மாது   தனது வெளிக் கடமையை முடித்துகொண்டு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி  திரும்பிக்கொண்டிருந்த வேளை இடைவழியே  மயங்கி விழுந்துள்ளார் இதனையறிந்த வழிப்போக்கர்கள்  உடனடியாக சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு கடமை நேரத்தில் பரிதாபகரமாக உயிரிழந்த மருத்துவ தாதியின் சடலம் மேற்படி வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை இடம்பெற்று வருவதுடன்சாவகச்சேரி பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டூள்ளனர்.

க.க.விஜியந்தன்

0 கருத்துக்கள் :