இலங்கையின் விசாரணை குறித்து குடைகிறது ஐ.நா.

18.8.14

போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக, நம்பகமான நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பிலும் அது தொடர்பான இராணுவ விசாரணைகள் எந்த நிலையில் உள்ளன என்பது தொடர்பிலும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பதிலளிக்க வேண்டும் என்று இலங்கை அரசை ஐ.நா மனித உரிமைகள் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

ஜெனிவாவில் எதிர்வரும் ஒக் ரோபர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் குழுவின் 112 ஆவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. அந்த அமர்வில் இலங்கை, புருண்டி, யஹய்டி, மோல்டா, மோன்ரெனிக்ரோ மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர்பான அறிக்கைகள் பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இலங்கை தொடர்பான விவாதம், ஒக் ரோபர் 7 ஆம், 8 ஆம் திகதிகளில் நடக்கவுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரி மைகளுக்கான சர்வதேச உடன் பாட்டின், 40 ஆவது பிரிவுக்கு அமைய நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சமர்ப்பிக் கப்பட வேண்டிய அறிக்கையை இலங்கை அரசு, ஏற்கனவே, மனித உரிமைகள் குழுவிடம் கையளித்துள்ளது. அதே வேளை, சிவில் சமூகத்தின் சார்பிலும் அறிக்கைகள் சமர்ப் பிக்கப்பட்டுள்ளன.

அவற்றின் அடிப்படையில், இலங்கையிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்படவுள்ளது. முக்கியமாக, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக நம்பகமான நடு நிலையான விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?, அது தொடர்பான இராணுவ விசாரணைகள் எந்த நிலையில் உள்ளன?, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், இனப் பாகுபாட்டை ஒழிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகள், சுதந்திரமான கருத்துக்களை வெளியிடும் மற்றும் ஒன்றுகூடும் உரிமை மறுக்கப்படுவது, வாழும் உரிமை, பொறுப்புக் கூறல், தீவிரவாதத்துக்கு எதிரான

0 கருத்துக்கள் :