அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டுவோம்: விழிப்பூட்டல் - இனங்காணுதல்- பதிவிடல்- ஆவணப்படுத்தல்

25.8.14

சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டி தமிழர்களுக்கான பரிகார நீதியினை கோரும் செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசின் சாட்சியமில்லா இனஅழிப்பின் சாட்சியங்களும், ஆதாரங்களும் சான்றுகளாக வெளியுலகில் அம்பமாகி வரும் நிலையில், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தினால் சிறிலங்கா தொடர்பில் மேற்கொள்ளப்படும் அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும், விசாரணை முயற்சிகளுக்கான மையம் மேற்கொண்டு வருகின்றது.

இது தொடர்பில் விழிப்பூட்டல் - இனங்காணுதல் - பதிவிடல் - ஆவணப்படுத்துதல் எனும் அடிப்படையில்,  இச்செயல்முனைப்புக்கான பயிலரங்குகள் நடைபெற்று, வழிகாட்டுதலுக்கு அமைய சாட்சியங்கள், ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

இவ்விவகாரத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கெடுத்துக் கொள்ளவும் சாட்சியங்கள் தங்கள் வாக்குமூலங்களை ஆதாரங்களை வழங்கவும் என http://icppg.org எனும் இணையத்தளம் செயற்பாட்டில் இயங்கிவருகின்றது.


மேலும் தொடர்பில் விபரங்களை குறித்த இந்த 0044 786 913 30 73 தொடர்பு கொண்டு நாடுவாரியாக விபரங்களை பெற்றுக் கொள்ளமுடியும் என இந்த மையம் அறிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :