மட்டக்களப்பில் மோட்டார் குண்டுகள் மீட்பு

21.8.14

மட்டக்களப்பு வாகரையிலுள்ள ஊரியன்கட்டில் கைவிடப்பட்ட காணி ஒன்றிலிருந்து 2 மோட்டார் ஷெல் குண்டினை நேற்று புதன்கிழமை  மீட்டு அவற்றினை  செயழிலக்கச் செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

வாகரை 233 ஆவது இராணுவப் படைப்பிரிவினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலினையடுத்து குண்டு காணப்பட்ட இடத்திற்கு குறித்த படைப்பிரிவினர் சென்று அவற்றை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

மேற்படி குண்டுகளை குண்டு செயல் இழக்கச் செய்யும் இராணுவப் பிரிவினர் செயழிலக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :