ஜெயலலிதா முன்னால் மண்டியிடும் மகிந்த

3.8.14


“தாயே என்னை மன்னித்து விடுங்கள். நான் பிழை செய்துவிட்டேன்” என்று இலங்கை ஜனாதிபதி தமிழக முதல்வரிடம் கோருவதைப் போன்ற சுவரொட்டிகள் தமிழகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக கோயம்புத்தூரில் இந்த சுவரொட்டிகளை காணக்கூடியதாக உள்ளது.

தமது கரங்களை கூப்பிய நிலையில் ஜெயலலிதா முன்னால் மண்டியிட்டு ராஜபக்ச மன்னிப்பு கோருவதைப் போன்று இந்த சுவரொட்டிகள் அமைந்துள்ளன.

இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளத்தில் ஜெயலலிதாவையும் இந்திய பிரதமரையும் இழிவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பில் இந்தியா தமது கடும் கண்டனத்தை வெளியிட்டது.

இதனையடுத்து இலங்கை இதற்காக பகிரங்க மன்னிப்பை இந்தியாவிடம் கோரியது.
இதனை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் சுவரொட்டிகள் அமைந்துள்ளன.

0 கருத்துக்கள் :