ஜெயலலிதா - மோடி காதல் கட்டுரை ; மகிந்த விசாரணைக்கு உத்தரவு

5.8.14

பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தில் வெளியான கட்டுரை தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.


அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை அவதூறு செய்யும் வகையில் கட்டுரையொன்று வெளியாகியிருந்தது. இக் கட்டுரை தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி   அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


அலரி மாளிகையில் இன்று ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த கட்டுரை தொடர்பில் ஜனாதிபதி தனது வருத்தத்தை  தெரிவித்தார்.


இதேவேளை இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக வெளியிடப்பட்டிருந்த ஆக்கம் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்திலிருந்து அகற்றிக் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :