நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது ஆணுறுப்பை துண்டாக்கிய நாய்!

4.8.14

சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் யங்  என்பவர் வீதியோரத்தில் நின்று தனது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். இதன்போது அவருடைய நண்பருடன் அவர் வளர்க்கும் மஸ்டிப் என்ற நாயும் இருந்தது.

நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென யங்கின் ஆணுறுப்பை மஸ்டிப் கவ்வி பிடித்து கடித்து துண்டாக்கிவிட்டது. இதனால் யங் வலியால் துடித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் யங்கை வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இரத்த வெள்ளத்தில் சுயநினைவு இல்லாமல் இருந்த அவருக்கு சீனாவின் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர்;கள் சுமார் ஆறுமணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் துண்டான ஆணுறுப்பு மீண்டும் ஒட்டவைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  யங்வுடன் பேசிக்கொண்டிருந்த அவருடைய நண்பர் தன் நாயுடன் தலைமறைவாகி உள்ளார். அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 கருத்துக்கள் :