இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய நிலை:போர்க்குற்ற விசாரணை!!

3.8.14

உள்நாட்டு விசாரணையை நடத்தாமையினால் ஐ.நா. விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், அரசாங்கம் தற்போது யுத்தக் குற்றச்சாட்டு, மனித உரிமை மீறல் குறித்து விசாரணை செய்ய சர்வதேச நிபுணர்களை நியமித்தமை இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய கதையாகவுள்ளதாக ஜே.வி.பி. விமர்சித்துள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பதிலளிக்கையில்; யுத்தக் குற்றச்சாட்டு, மனித உரிமை மீறல் குறித்தான ஐ.நா. விசாரணை திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. அது அரசாங்கம் உள்நாட்டு விசாரணையொன்றை மேற்கொள்ளாததன்  விளைவேயாகும். இவ்வாறான நிலையில் வெளிநாட்டு தரப்பினர் விசாரிக்க இடமளிக்க மாட்டோமென அரசாங்கத்தரப்பினர் கூறினர்.

தற்போது ஐ.நா. விசாரணை வந்துள்ள நிலையில், வெளிநாட்டு விசாரணையாளர்கள் தேவையில்லையெனக்  கூறிய அரசு, சர்வதேச நிபுணர்களை தற்போது நியமித்துள்ளது.

 இந்த விசாரணை ஐ.,நா. விசாரணையை ஒத்ததாக இருக்கும். அரசாங்கம் உள்நாட்டு விசாரணையை மேற்கொண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. இது இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய கதையாகவுள்ளது.

0 கருத்துக்கள் :