சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

20.8.14

பதினாறுவயதான சிறுமியை பலாத்காரமாக விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை மஹாரகமையில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாது, பலவந்தமாக நேரத்துக்கு நேரம் ஏனையோருக்கு விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக அனுப்பி வைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமி தற்போது கர்ப்பம் தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் மஹியங்கனையைச் சேர்ந்த 28 வயதுடையவர். இவரை இன்று புதன்கிழமை (20) அளுத்கடை நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தவுள்ளனர்.

0 கருத்துக்கள் :