மட்டக்களப்பு :பல்கலைக்கழக மாணவன் கைது

19.8.14

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழக மாணவனொருவன் அலைப்பேசித் திருட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

முகாமைத்துவ பீட மாணவனான ஏறாவூர் காளிகோயில் வீதியைச் சேர்ந்த சந்திரகுமார் சந்திரமதன் என்ற மாணவனே நேற்று திங்கட்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டார் என்று ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவு சார்ஜன் எம். நஜிமுதீன் தெரிவித்தார்.

கடந்த 2014.07.26 அன்று முகாமைத்துவ பீட மணவனான இறக்குவாணை கடுகஸ்வத்தயைச் சேர்ந்த ஜாஹிர் முதியான்ஸலாகே புளினமுகாந்திரம் என்ற மாணவன் தனது 18 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைப்பேசி களவாடப்பட்டமை பற்றி ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தொடராக விசாரணை நடத்திவந்த ஏறாவூர் பொலிஸார், களவாடப்பட்ட தொலைபேசி பாவினையிலுள்ளதை நீதி மன்றக் கட்டளைக்கு இணங்க அலைப்பேசி வலையமைப்பின் ஒத்துழைப்புடன் அறிந்து, அவரது வீட்டில் வைத்து இந்த மாணவனை கைதுசெய்தததுடன் அலைப்பேசியையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சந்தேக நபரை இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த களவைக் கண்டு பிடிப்பதில் தொடர்ச்சியாக குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஹிரன் செனவிரட்ன, பொலிஸ் சார்ஜன்ற் எம். நஜிமுதீன் (64087) பொலிஸ் சார்ஜன்ற் எம்.ஏ.சி.எம். தாஹிர் (64931) பொலிஸ் கான்ஸ்டபிள்களான ஆர்.எம். பண்டிதரெட்ன (55164)  பி.ஜி. தர்மசேகர (36721) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

0 கருத்துக்கள் :