யுத்தக் குற்றச்செயல்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு : கெஹலிய

15.8.14

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பு உண்டு என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மிகுந்த மனிதாபிமான நோக்குடன் அரசாங்கம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 300,000 முதல் 400,000 வரையிலான மக்களை மீட்டெடுத்த போது யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்களாம்.

இந்த மீட்புப் பணிகளின் போது குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பு உண்டு ஆனால் சில தரப்பினர் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது குற்றச் செயல்கள் மட்டுமே இடம்பெற்றதாக குற்றம் சுமத்தி வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எந்த யுத்தமும் இன்பகரமானதாக அமையாது, எந்த விடயமும் 100 வீதம் சரியானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :