ஹெரோயினுடன் மூன்று பெண்கள் கைது

15.8.14

பேலியகொடை பிரதேசத்தில் ஹெரோயினுடன் மூன்று பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 225 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :