வெளிநாட்டு பணத்தை கொண்டு பௌத்த மதத்தை இழிவுபடுத்த முடியாது:மேர்வின்

14.8.14

வெளிநாட்டு பணத்தின் மூலம் பௌத்த மதத்தை இழிவுபடுத்த இடமளிக்க முடியாது என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

கண்டிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரரான உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரை சந்தித்த பின் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எங்கிருந்தோ கிடைக்கின்ற பெருந்தொகையான பணத்திற்காக புத்தசாசனத்தை அழிப்பதற்கு எவருக்கும் இடம் அளிக்க முடியாது. புத்த மதத்துக்கு உரித்தான அடக்கமான முறையில் பௌத்த துறவிகள் நடந்து கொள்வர்.

மெதுமையான கனிவான வார்த்தைப் பிரயோகங்கள் அவர்களோடு ஒட்டிப் பிறந்தது ஒன்று. பௌத்த துறவிகள் என்போர் எப்போதும் பக்குவப்பட்டவர்கள். ஆவேசம் உணர்ச்சி வசப்படுபவர்கள் அல்ல.

இருப்பினும் கனிவான அடக்கமான வார்த்தைக்கு பதில் கடும் வார்த்தை பிரயோகங்களை கையாண்டு பௌத்த  துறவிகளுக்கே இல்லாத பண்புகளை வெளிக்காட்டுவதை பௌத்த மதத்தவன் என்ற வகையில் அனுமதிக்க முடியாது.

இது புத்த மதத்தை இழிவுபடுத்தும்  செயலாகும். வெளியிலிருந்து அவதானிப்போர் பௌத்த துறவிகள் என்போர் மிகவும் ஆவேசப்பட்டவர்கள் என்று தப்பபிப்பிராயம்  கொள்ளச் செய்யும். அதற்கு எம்மால் இடம் அளிக்க முடியாது என்றார்.

0 கருத்துக்கள் :