நாட்டை முன்னோக்கி நகர்த்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்தவே!

11.8.14

நாட்டை முன்னோக்கி நகர்த்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே என அஸ்கிரிய பீடாதிபதி உடுகம சிறி புத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீராம விஹாரையில் நேற்று நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பழக்க வழக்கங்களை பேணிப் பாதுகாத்து நாட்டின் அபிவிருத்தியை முன்நோக் நகர்த்தக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதியே.

அமைச்சர்கள் அதிகாரிகள் இதற்கு முழு அளவில் ஆதரவளித்தால் நாட்டை மேலும் அபிவிருத்தி அடையச் செய்ய முடியும்.

ஜனாதிபதி சிறந்த முறையில் கடமையாற்றி வருகின்றார்.
அவரால் தனித்து நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.

அமைச்சர்களும் அதிகாரிகளும் தங்களது கடமைகளை உரிய முறையில் செய்ய வேண்டியது அவசியமானது.

அரசாங்கத்தின் குறைபாடுகள் இருக்கக் கூடும் அவை அனைத்தையும் ஜனாதிபதியினால் மட்டுமே தீர்த்து வைக்க முடியாது என அஸ்கிரிய பீடாதிபதி தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய பீடாதிபதி ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கடந்த காலங்களில் விமர்சனம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :