தங்கையை கத்தியால் குத்திக் கொன்ற 13 வயது அக்கா

21.8.14

தங்கையை 13 வயது அக்கா கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று மொனராகலை படல்குபுர பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதில் பதிலா பானு (வயது 6 ) என்ற சிறுமியே கத்திக்குத்துக்கு இலக்காகி படல்குபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 அக்கா - தங்கை இருவருக்குள்ளும் ஏற்பட்ட முரண்பாடே இக் கொலைக்கான காரணம் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான சிறுமி மரத்தில் இருந்து விழுந்ததாக கூறியே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை சந்தேகநபரான 13 வயது சிறுமி கைதுசெய்யபட்டு பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :