13-வயது மாணவிக்கு கட்டாயத் திருமணம்;மாப்பிள்ளைக்கு ஏழு ஆண்டு

19.8.14

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் அருகிலுள்ள தட்டாங்குட்டையை சேர்ந்தவர் முரளி(வயது-24) இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில், டெய்லராக வேலை செய்கிறார். இவர், 2010-ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் 31-ம் தேதியன்று, ஈரோடு மாவட்டம், கோபி அருகிலுள்ள குன்னத்துாரை சேர்ந்த, 13-வயது மாணவியை, அவர்  பள்ளிக்கு செல்லும்போது, காரில் கடத்திச் சென்றுள்ளார்.

பிறகு, கோபி அருகிலுள்ள பாரியூர் அம்மன் கோவிலில் வைத்து மாணவிக்கு கட்டாய தாலி கட்டினர். தாலிகட்டி திருமணம் செய்த முதல், நாள் அப்பகுதியில் அவருடன் தங்கினார்.

மறுநாள் சேலம் அழைத்துச் சென்று அங்குள்ள விடுதி அறையில் தங்க வைத்துள்ளார். இரண்டு நாட்களுக்குபின், அச்சிறுமி, தான் கடத்தப்பட்டு, கட்டாய தாலி கட்டப்பட்டது குறித்து, தன் மாமாவுக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

இதன்மூலம் தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், அவிநாசி மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சேலத்தில் இருந்த சிறுமியை போலீசார் மீட்டு வந்தனர். பிறகு நீதிமன்ற உத்தரவின்படி பள்ளி மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மாணவியை கடத்திய முரளி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்த வழக்கு திருப்பூர் மகளீர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞர் பரிமளா ஆஜரானார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வசந்த லீலா, 13 வயது சிறுமியை, கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக, முரளிக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குபின் மாப்பிள்ளை முரளி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

0 கருத்துக்கள் :