நகரசபை உறுப்பினர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி

1.7.14

பேருவளை நகர சபையின் உறுப்பினர் காமினி அல்விஸ் (48 வயது) வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். நேற்று  திங்கட்கிழமை காலை ஹெட்டிமுல்ல பகுதியில், பேருவளையிலிருந்து அளுத்கம நோக்கி இவர் சென்ற மோட்டார் சைக்கிள் பஸ்ஸூடன் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவரது மகன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற போது நகரசபை உறுப்பினர் அதன் பின்புற ஆசனத்தில் அமர்ந்து சென்றுள்ளார்.

ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட போது இவர்களது மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த நகரசபை உறுப்பினரை களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார். இவரது மகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்தைத் தொடர்ந்து பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 கருத்துக்கள் :