பெற்றோரை ஏமாற்றிவிட்டு வந்ததால் நேர்ந்த அவலம்

31.7.14

களுத்துறை வடக்கு கடற்கரையிலிருந்த 14 வயது மாணவிகள் இருவரைக் கடத்திச்சென்று லொட்ஜ் ஒன்றில் வைத்து இரவு முழுவதும் வல்லுறவுக்கு உட்படுத்திய ஐந்து பேரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு களுத்துறை பிரதம நீதிவான் அஜித் எம். மாசிங்க களுத்துறை வடக்குப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வல்லுறவால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த இந்த மாணவியரை களுத்துறை வடக்கு ஆப்ரூ வீதியிலுள்ளவர்கள் பொலிஸில் ஒப்படைத்த பின் இருவரும் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த மாணவியர் இருவரும் நேற்றுமுன்தினம் பாடசாலை செல்வதாக வீட்டில் பொய் கூறிவிட்டு களுத்துறை கடற்கரைக்கு வந்திருக்கிறார்கள். அங்கு தங்களது பாடசாலை சீருடைகளைக் களைந்து ஒளித்து வைத்துவிட்டு சாதாரண உடையில் வேறு சில மாணவர்களுடன் சேர்ந்து உல்லாசப்பயணம் போயிருக்கிறார்கள்.

மாலையில் கடற்கரைக்குத் திரும்பிவந்து பார்த்தபோது ஒளித்துவைத்திருந்த பாடசாலை சீருடை காணாமல் போயிருந்தது. சாதாரண உடையில் வீடு திரும்பப் பயந்தவர்கள் கடற்கரையிலேயே இரவைக் கழித்துக் கொண்டிருந்த போதே கடத்தப்பட்டிருக்கின்றனர்.
களுத்துறை வடக்குப் பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :