தகாத உறவால் குழந்தைக்கு பால் கொடுக்க மறுத்த மனைவி: கத்தரியால் குத்திய கணவன்

4.7.14

தன்னுடைய கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு மறுத்த மனைவியை அவரது கணவன் தாக்கிய சம்பவம் ஒன்று பேருவளைப் பிரதேசத்தில் இடம்பெறுள்ளது.

கணவனின் தாக்குதலால் கடும் காயங்களுக்கு உள்ளான மனைவி, பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வைத்தியசாலைக்கு நேற்று பகல் சென்ற கணவன் வைத்தியசாலையில் வைத்தே மனைவியை மீண்டும் கத்தரியால் ஐந்து இடங்களில் குத்தியுள்ளார்.
சந்தேகநபரான அந்த பெண்ணின் கணவன் முச்சக்கரவண்டியின் சாரதி என்பதுடன் அவர், கத்தரியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த பெண் வேறொருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும் அதனால் தன் கணவன் மற்றும் குழந்தையை வேறுபடுத்தி பார்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆம் திகதி தன்னுடைய குழந்தைக்கும் பால் கொடுப்பதற்கு மறுத்துள்ளார். அதன்போதே கணவன் தனது மனைவியை தாக்கியுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

காயமடைந்த மனைவி பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரை பார்ப்பதற்காக தன்னுடைய ஒருவயதும் மூன்று மாதங்களேயான குழந்தையை தூக்கிக்கொண்டு கணவன், வைத்தியசாலையிக்கு நேற்று காலை சென்றுள்ளார்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்குமாறு கணவன் கேட்டபோதும் மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து குழந்தையை தூக்கிகொண்டு கணவன் வீட்டுக்சென்றுவிட்டார்.
வீட்டுக்சென்ற அவர், பகல் சாப்பாட்டு சமைத்து எடுத்துகொண்டு குழந்தையும் தூக்கிக்கொண்டு மனைவியை பார்ப்பதற்கு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரது சாப்பாட்டை ஏற்பதற்கு மறுத்த அந்தபெண், தன் குழந்தைக்கும் பால் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த சந்தேகநபரான கணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலால் மனைவியை ஐந்து இடங்களில் குத்தியுள்ளார்.

அந்த பெண் தன்னுடைய கள்ள புருஷன் கொடுத்த உணவை உட்கொண்டதால் கணவனின் சாப்பாட்டை ஏற்க மறுத்து விட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :